மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைமுறைகளை பா.ஜ.க. மீறியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மாநில பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில், பா.ஜ.க. சார்பில் செய்தித்தாள்களில் உண்மைக்கு புறம்பான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
செய்திதாள்களில் வெளியிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை மத்திய பிரதேச மாநிலத்திலேயே இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் காந்தாராவிடம் புகார் அளித்துள்ளது.
Discussion about this post