மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதுதான் நியாயம் என்றும், இல்லை என்றால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதுதான் நியாயம் என்றும் தவறினால், ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.
Discussion about this post