பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம். ஆனாலும் உத்தர பிரதேசம், அரியானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பட்டாசு வெடிக்கப்பட்டது. டெல்லியில் மட்டுமே 643 விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறி உள்ளதாக கூறி நவம்பர் 12-ம் தேதி சமூக ஆர்வலர் சுபாஷ் தத்தா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post