ஐதராபாத்தில் ஹவாலா பணம் ஏழரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தரகர்கள் 4 பேர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அங்கு தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளது. இதையொட்டி ஐதராபாத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது காரில் கடத்திவரப்பட்ட 7 கோடியே 51 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, பணத்தை கடத்திய வழக்கில் ஹவாலா தரகர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். விசாரணையில் பணம் கடத்தலின் பின்னணியில் ஒரு செல்போன் நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Discussion about this post