96 பட கதைத் திருட்டு புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி, இளம் நெஞ்சங்களை கவர்ந்த 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் த்ரிஷா அணிந்து வரும் உடையும் தற்போது ட்ரென்டிங் பட்டியலில் உள்ளது. இந்நிலையில், 96 படத்தின் கதை தன்னுடையது என்று, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளரான சுரேஷ் கொடி பிடித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தன்னுடன் கதை விவாதத்தில் கலந்துகொண்ட இயக்குனர்கள் பாலாஜி தரணிதரன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோருடன், 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கதையின் பவுண்டட் ஸ்க்ரிப்ட் என்று சொல்லப்படும், கதைப் புத்தகத்தையும் காண்பித்தார். தன்னுடைய கதையையும், 2016 ம் ஆண்டே, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிந்துள்ளதாக தெரிவித்தார் பிரேம் குமார். 96 படத்தின் வெற்றியை பயன்படுத்தி புகழடையலாம் என்ற நினைப்புடன் சுரேஷ் கூறியுள்ள புகாரால், தன்னுடை படத்தின் வெற்றியை கூட கொண்டாட முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்தார் பிரேம் குமார். ஏற்கனவே, சர்கார் கதைத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது, இந்த பாணியில் புகழடையலாம் என்று பல பேர் கிளம்பியுள்ளது போல் தெரிகிறது.

 

Exit mobile version