தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே வெடியை காலி செய்யும் 90ஸ் கிட்ஸ்

சமூக வலைதளங்களில் ஒரு மீம்ஸ் ஒன்று கிரியேட் ஆகி ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. தீபாவளி முடிந்த உடன் மீதி பட்டாசு எடுத்து வச்சு கார்த்திகைக்கு வெடிக்கிற 2கே கிட்ஸ் இல்லடா, தீபாவளி வர்றதுக்கு முன்னாடியே பட்டாச காலி பண்ணிட்டு முடிஞ்சு போச்சேன்னி நிக்கிற 90 கிட்ஸ்டா என்று அதில் வருகிறது.

அது உண்மையும் கூடத்தான் ஒரு காலத்தில் 80கள், 90களில் இருந்த சிறுவர் சிறுமிகள் ஒரு மாதத்துக்கு முன்பே தங்களது பட்டாசு வெடிக்கும் பணியை தொடங்கி விடுவர். வியாபாரிகளும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பட்டாசு விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவர்.

எப்போது பார்த்தாலும் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு எங்கும் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். வெங்காய வெடி, பிஜிலி வெடி, குருவி வெடி, லட்சுமி வெடி, நேதாஜி வெடி, அணுகுண்டு உள்ளிட்டவைகளை பாக்கெட் பாக்கெட்டாக வைத்து சிறுவர்கள் கொண்டாட்டங்களில் களிப்பர்.

பள்ளி விடுமுறை நாட்களில் எல்லாம் 80ஸ் 90ஸ் கிட்ஸ் தங்களது வழக்கமான விளையாட்டுக்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு பட்டாசு வெடிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருப்பர். பட்டாசு முடிந்து விட்டால் கூட வெடித்து முடித்த பட்டாசில் உள்ள கருகிய வெடி மருந்தை பேப்பரில் குவித்து பேப்பரில் தீயை வைத்து எரிப்பர் அதுவும் லேசாக மத்தாப்பு போல் வெடிக்கும். ஆனால் இது ஆபத்தானதே..,

தற்போது தீபாவளி நெருங்கும் முதல் நாளும், தீபாவளியன்றும் மட்டுமே பட்டாசு சத்தம் கேட்கிறது. அவசர யுகம் சமூக வலைதளங்கள், ஆண்ட்ராய்டு ஃபோன் என வாழ்ந்து வரும் நாம் இது போல ஒரு மாதம் முன்பு உள்ள கொண்டாட்டத்தை இழந்து வருவது உண்மை.

நீதிமன்றமே பட்டாசு வெடிக்கும் சில நிபந்தனைகளை நீக்கினால் கூட அந்த பழைய நிலை திரும்பி வராது என்பது நிதர்சனமான உண்மை.

Exit mobile version