பேனா சிலை 90 சதவீதம் முடிச்சிருச்சாம்! அப்போ மக்கள் நலப் பணிகள் எங்க பாஸ்!

அராஜகம் செய்கின்ற கணவனுக்கு வாக்கப்பட்ட மனைவியைப் போல தற்போது திமுகவிடம் தமிழ்நாடு மக்கள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி போயிருக்கிறார்கள். சிறப்புத்திட்டங்கள் பலவற்றை நாங்கள் கொண்டுவருகிறோம் என்று சொல்லி வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் அலைக்கழித்துவிட்டு தன்னை புரமோட் செய்வதிலும் விளம்பரம் தேடிக் கொள்வதிலும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். மத்திய அரசிடம் நலத்திட்டங்களுக்காக பல லட்சம் கோடிகளை கடனாகப் பெற்று வரும் திமுக அரசு, இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியுள்ளதுதான் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.

மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியில்லை என்று திமுக சொல்லி வருகிறது. மேலும் அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கியத் திட்டங்களை கிடப்பில் போட்டிவிட்டு, வாக்குறுதி அளித்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் ஓ.பி அடித்து கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அமைச்சர்களும். தற்போது பேனா சிலை அமைக்கும் பணி தொண்ணூறு சதவீதம் நிறைவடைந்துவிட்டது என்று அமைச்சர் எ.வ. வேலு சொல்கிறார். மக்களுக்கு எந்த திட்டங்களும் வகுக்காமல் தங்களவர்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும் விளம்பரப்படுத்துவதிலுமே கவனத்தை செலுத்துகிறது இந்த விளம்பர கவர்மண்ட். தேசிய தீர்ப்பாயம் சில நிபந்தனைகளோடு மெரினா கடற்கரையில் பேனா சிலை  வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் பலரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்தும் திமுகவிற்கு சாதகமாகவே பசுமைத் தீர்ப்பாயம் இசைவு அளித்திருந்தது. இது ஒருபுறம் இருக்க அமைச்சர் எ.வ.வேலுவின் இந்த ஸ்டேட்மண்ட், ஸ்டேட்டுக்காக வேலை செய்வதைவிட திமுக குடும்பத்திற்கு வேலைசெய்வதுதான் சால சிறப்பு என்பதுபோல் இருக்கிறது. அய்யா எ.வ.வேலு அவர்களே உங்கள் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் முடிந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? நிச்சயம் தெரிய வாய்ப்பிருக்காது. பதவிக்காக பல்லக்கு சுமக்கவும், வாரிசு அமைச்சருக்கு பட்டாபிஷேகம் நடத்தவும்தான் உங்கள் அனைவருக்கும் நேரமிருக்கும். அதனை விடுத்து மக்களுக்காக என்றைக்கு நீங்கள் சிந்தித்து இருக்கிறீர்கள் என்று யோசித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. பணமும் ஊழலும் பெருகிப் போயிருக்கு திமுகவிற்கு மக்கள் மேல் என்றைக்கு அக்கறை இருந்திருக்கிறது. மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்கள் பாலூட்டும் அறையை மதுப்பிரியர்களின் கூடாரமாக மாற்றியது, அம்மா மினி கிளினிக்கை மூடியது, தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்தது என்று இன்னும் அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை நிறுத்தியதில் தான் திமுகவிற்கு பெருத்த பெருமை உள்ளது.

 

Exit mobile version