டெங்கு காய்ச்சல் 90 சதவீதம் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் நியாமான தீர்ப்பு வழங்கி இருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், 300 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என சுகாதாரத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

கடந்த ஆண்டைவிட டெங்கு காய்ச்சல் 90 சதவீதம் கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version