ஆலந்தூரில் ரூ.9.7 கோடி மதிப்பிலான நடைமேம்பாலம் திறப்பு

சென்னை, ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் – ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

ஆலந்தூர், ஜி.எஸ். டி.சாலை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி என்பதால், பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.9 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நடை மேம்பாலம் அமைத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் நடை மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

Exit mobile version