சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
2200 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையம் 2013-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இதில் கண்ணாடியால் ஆன மேற்கூரை அமைப்பதற்காக மட்டும் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய மேற்கூரை கண்ணாடி பலமுறை உடைந்து விழுந்து விபத்தக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், 83-வது முறையாக மேற்கூரை கண்ணாடி உடைந்து விழுந்தது. உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்குச் செல்லும் 3-வது வாயில் மேற்பகுதியில், சுவரில் பதிக்கப்பட்டிருந்த 7 அடி நீளமுள்ள கண்ணாடி பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது பயணிகள் யாரும் அந்த வழியாக செல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.