புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவீதமும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் 77.66 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை எவ்வித அசம்பாவமும் இன்றி நடைபெற்றது. புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் 81.57 சதவிகிதமும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 77.66 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பாதுகாப்பு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Discussion about this post