இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 8 பேர், 3 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து, பயணம் மேற்கொண்டனர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் உதகை மலை ரயில் முக்கிய இடம் பெறுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 46.5 கிலோ மீட்டர் கொண்ட மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும், அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன.
செங்குத்தாக செல்லும் இந்த தண்டவாளத்தில் ரயிலில் பயணம் செய்வது இனிமையான அனுபவம். இதை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் 3 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர். அப்போது குன்னூரில் உள்ள பாரம்பரியமிக்க மலை ரயிலின் லோகோ பணிமணையை பார்வையிட்டனர். அங்குள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இயக்கத்தைப்பற்றியும் கேட்டறிந்தனர்.
Discussion about this post