இமயமலைப் பகுதியில் சுமார் 8 புள்ளி 5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் மற்றும் டெல்லி தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக இமயமலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் இமயமலைப் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட வரைபடம் மற்றும் கார்டோசாட் செயற்கைக்கோளும் இந்த எச்சரிக்கையை உறுதிபடுத்தியுள்ளன. இதனால் நேபாள – இந்திய எல்லைப் பகுதியில், இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post