தமிழ்நாட்டில் தொடர்ந்து போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று வரை 53 போலி மருத்துவர்கள் கைதாகியிருந்த நிலையில் காவல்துறையின் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தியின்படி இன்று மற்றும் கடந்த பத்து நாட்கள் சேர்த்து மொத்தம் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் அம்மா மினி க்ளினிக் திறக்கப்பட்டு சரியான மருத்துவரை நோக்கி சென்ற பாமர மக்கள், மினி க்ளினிக் மூடப்பட்டதால் வேறு வழியின்றி போலி மருத்துவரை அணுகும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றே ஆக வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதி வருகிறார்கள். தற்போது காவல்துறையானது கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் எண்ணிக்கையை பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
கைது செய்துவிடுவதன் மூலம் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியாது. அவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த சமுதாயத்தில் இருக்கலாம். அவர்களை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். இது அரசின் கடமை. போலி மருத்துவர்களை குறித்த பத்திரிகை செய்தி, பேனர்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் செய்திருக்க வேண்டும். ஆனால் இதனை செய்ய ஆளும் அரசு தவறியுள்ளது. இதனாலேயே இத்தகைய போலி மருத்துவர்கள் அதிகப்படியாக வெளியில் தற்போது தெரியவந்துள்ளனர்.