கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே 70 ஆண்டுகளுக்கு பழமை வாய்க்கால் பாலம் பழுதாகி உள்ளதால், புதிய பாலம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
லாலாப்பேட்டை அருகே மகிளிப்பட்டியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாய்க்கால் பாலம் மிகவும் பழுதாகி உள்ளது. இந்த பாலத்தை கடந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்தநிலையில், இந்த
பாலம் சேதமடைந்து, இடியும் தருவாயில் உள்ளது. அதுமட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், கால்நடைகள் வாய்க்காலில் தவறி விழுவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமரிடம், பலமுறை சீரமைக்க வழியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், புதிய பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.