சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரண்டாவது கடற்கரை சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் எதிரே இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று
கொண்டிருந்தனர். போலீசார் அவர்களது அருகே சென்றபோது இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர். இதனை அடுத்து ஒருவரை மடக்கிப்பிடித்த போலீசார், அவர் வைத்திருந்த பையில் நடத்திய சோதனையில் 70 லட்ச ரூபாய் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். கைதான நபர், சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த சகாபுதின் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Discussion about this post