காரைக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மேளதாளம் முழங்க பள்ளிக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மேளதாளத்துடன், சீர்வரிசையாக வைத்து ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். அதில் சிசிடிவி கேமரா, கணினி மேஜை,நாற்காலிகள், ஸ்மார்ட் போர்டு, மின் விசிறி, பிரிண்டர் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் ஏராளமான கல்வித்துறை கலந்துகொண்டனர்.
Discussion about this post