7வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறிய ஜோகோவிக்!

 

அமெரிக்கா ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிக், தரவரிசையால் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர்   ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிக் வென்று அசத்தினார். 

இதன் மூலம், அவர் 14 வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில், உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 7 வது இடத்தில் இருந்த ஜோகோவிக், 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அவர் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தரவரிசையில் முதல் இடத்தில் நடாலும், 2 வது இடத்தில் ரோஜர் பெடரரும் உள்ளனர். 

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செரீனா வில்லியம்சை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், நவோமி அதிரடியாக 12 இடங்கள் முன்னேறி, 7 வது இடத்தை பிடித்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் 26 வது இடத்திலிருந்து 16 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

 

 

Exit mobile version