680 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை! தும்பை விட்டு வாலை பிடிக்கும் அன்பில் மகேஷ்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டுல உள்ள 37ஆயிரம் அரசு பள்ளிகள்ல, 6ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கு. இப்போ கோடை விடுமுறைங்கிறதால பள்ளிகள மீண்டும் திறக்குறதுக்கு முன்னாடியே ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வ முடிக்க உத்தரவிடப்பட்டு, கடந்த ரெண்டுநாளா கவுன்சிலிங் நடந்துக்கிட்டு இருக்கு.. இதுல பல பள்ளிகள்ல தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கூடுதலா செஞ்சிக்கிட்டு இருந்தவங்க வேறு பள்ளிகளுக்கு மாறுதல் வாங்கிட்டுபோயிட்டாங்களாம். அதனால கிட்டத்தட்ட 680 மேல்நிலைப் பள்ளிகள்ல தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்பட்டிருக்காம்.
கோடை விடுமுறை முடிஞ்சி பள்ளிக்கூடம் தொறக்கும்போது, இந்த காலிப் பணியிடங்களுக்கு தலைமை ஆசிரியர்கள நியமிப்பாங்களா, அல்லது பழையபடியும் பொறுப்பு தலைமை ஆசிரியர போட்டே ஒப்பேத்துவாங்களா?
பொதுத்தேர்வுகளப்போ பரீட்சை எழுத ஆயிரக்கணக்கான, மாணவர்கள் வரலன்னதும் ஆசிரியர்கள போட்டு பாடாய்படுத்துன கல்வி அமைச்சர், முதலமைச்சர் பின்னாடியும், வாரிசு அமைச்சர் பின்னாடியும் சுத்துத்துறத நிறுத்திட்டு, தலைமை ஆசிரியர் பணியிடங்கள்ல தகுதியான ஆசிரியர்கள நிரப்புறதுல அக்கறை காட்டலாமேன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

Exit mobile version