புதுச்சேரியின் 65-வது விடுதலை நாள் விழாவை முன்னிட்டு அரசு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்ட நாள் புதுச்சேரியின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு புதுச்சேரியின் 65-வது விடுதலை நாளை முன்னிட்டு, காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் காவல்துறையினர் மற்றும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சமாதானப் புறாவும் பறக்க விடப்பட்டது. நிகழ்ச்சியில் காரைக்கால் ஆட்சித் தலைவர் விக்கிராந்ராஜா, அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post