குமரி, ராமேஸ்வரம், மற்றும் கேரளாவைச் சேர்ந்த 600-க்கும் அதிகமான மீனவர்கள் குஜராத்தில் உள்ள வீரவேல்கரை துறைமுகத்தில் இருப்பதாகவும், சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை, இரவிபுத்தன்துறை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கேரளா மாவட்டம் பூந்துறை, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டோர், புயல் அறிவிப்பிற்கு முன்னரே ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது குஜராத்தில் உள்ள வீரவேல்கரை துறைமுகத்தில் தஞ்சமடைந்து இருப்பதாகவும், 10நாட்களுக்கு மேல் ஆகியும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே குஜராத் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், வள்ளவிளையைச் சேர்ந்த மாதா என்ற விசைப்படகு கொச்சியில் கரை ஒதுங்கியுள்ளது. குமரி, கேரளா, வட நாட்டைச் சேர்ந்தவர்கள் என 13 பேர் கரை சேர்ந்துள்ளனர்.
Discussion about this post