திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் முருகன். இவர் அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணி, மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறைக்கு தகவலளிக்கப்பட்டது. அதே நேரம், இடையகோட்டை காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில், தலைமை ஆசிரியர் முருகன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
Discussion about this post