கீழடியில் வரும் 10 ஆம் தேதிக்குள் துவங்க உள்ள 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நடைபெற்ற 40 அகழ்வாய்வில் கீழடி அகழ்வாய்வு முக்கிய அகழ்வாய்வாக கருதப்படுகிறது. வரும் 10 ஆம் தேதிக்குள் 5 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. இந்தநிலையில் 5 ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி 19 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ளது. இதற்காக 55 லட்ச ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 5 ஆம் கட்ட அகழாய்வை 1 ஆண்டு நடத்த தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை 3 கட்டமும், மாநில அரசு 1 கட்டமும் என 4 கட்ட அகழ்வாய்வு கீழடியில் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. மத்திய தொல்லியல் துறை 3 கட்டமாக நடத்திய அகழ்வாய்வில் 7 ஆயிரத்து 818 பொருட்களும், மாநில அரசு நடத்திய அகழ்வாய்வில் 6 தங்க பொருட்கள் உட்பட 5 ஆயிரத்து 820 பொருட்கள் எடுக்கப்பட்டன.
கீழடி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே 2 புள்ளி 10 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் அந்த இடத்தையே சுத்தப்படுத்தும் பணி மற்றும் அளவு கற்கள் தோன்றும் பணி தற்போது நடைபெற்று வருகின்றன.
அருங்காட்சியகம் அமைவதுடன், ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்க உள்ளதை அறிந்து, தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post