ஏழு மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், 5-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி ஆகிய தொகுதிகளும் இதில் அடங்கும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். இம்முறையும் ஸ்மிருதி இரானியே பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். லக்னோ தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் மொத்தம் எட்டு புள்ளி 75 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகின்றனர்.. இதற்காக நாடு முழுவதும் 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.