5 லட்சம் மரம் நடப்போவதாக திமுக டிராமா! லஞ்சம் வாங்கிக்கொண்டு மரத்தை வெட்டிய திமுக கவுன்சிலர்!

கருணாநிதி பிறந்தநாளுக்காக 5 லட்சம் மரக்கன்று நடப்போறதா திமுக கம்பெனி ஒரு பக்கம் டிராமா போட்டுட்டு இருக்கப்போ, அவங்களோட கவுன்சிலர் ஒருத்தரு கட்டிங் வாங்கிட்டு நல்லா வளர்ந்த மரத்த, நடு ராத்திரில வெட்டிட்டு போயிருக்காரு… வாங்க இதைப் பத்தி பாக்கலாம்.

ஏற்கனவே வெயில் கொளுத்திட்டு இருக்க நேரத்துல, இப்படி நல்லா வளர்ந்த மரத்த வெட்டி சாய்க்க யாருக்கும் மனசு வராது. ஆனா, திமுககாரங்களுக்கு வரும் போல.

சென்னை நுங்கம்பாக்கம் 113வது வார்டுல உள்ள ராமா தெருவில் குடியிருக்கும் ஒருத்தர் கட்டுன புது வீட்டுக்கு முன்னாடி நல்லா வளர்ந்த பூவரச மரம் ஒண்ணு இருந்துச்சு. வீட்ட கட்டுன மனுஷன் தன்னோட வீட்டு அழகையும், வீட்டு வாசலையும் மரம் மறைக்குதுனு பொலம்பியிருக்காரு.

இதைக் கேட்டு பொங்கி எழுந்த 113ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரேமாவும், அவரது கணவர் திமுக நிர்வாகியுமான சுரேஷ், நாங்க இருக்கும்போது நீங்க ஏன் வருத்தப்படுறீங்க… நீங்க எங்களை கவனிங்க, நாங்க மரத்த கவனிச்சிக்குறோம்னு நைசா பேசி கட்டிங் வாங்கிட்டு நைட்டோட நைட்டா மரத்தை வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டாங்க..

மறுநாள் காலைல இதைப் பாத்த தெருவாசிங்க எல்லாம்… அவங்க நட்டுவச்சு, கூண்டு அமைச்சு பராமரிச்ச மரம் இப்படி சரிஞ்சு கெடக்குறது பாத்து கண்ணீர் வடிக்காத குறையா பொலம்பிட்டு இருக்காங்க. சரி சம்பவம் பண்ணது யாருனு கண்டுபிடிக்க அங்க இருக்க சிசிடிவி கேமராவ செக் பண்ணுவோம்னு போன பொதுமக்களுக்கு காத்திருந்துச்சு ட்விஸ்ட். சம்பவம் பண்ணும்போது கேமரால சிக்கிறக் கூடாதுனு உஷாரான கவுன்சிலர் அன்ட் கோ அங்க போலீஸ்காரங்களால வைக்கப்பட்ட சிசிடிவிய வேறு பக்கமா திருப்பிவிட்டு தடயமே இல்லாம மரத்த வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டாங்க.

கவுன்சிலர் பங்கு இல்லாம இது நடந்திருக்காது. எல்லாத்துலயும் காசு பாக்குற கவுன்சிலரம்மா இதுலயும் காசு பாத்திருச்சுனு பொதுமக்கள் அடிச்சு சொல்றாங்க. ஒரு பக்கம் கருணாநிதி பிறந்தநாளுக்கு 5 லட்சம் மரக்கன்று நடப்போறோம்னு திமுக டிராமா பண்ணிட்டு இருக்கப்போ, அவங்களோட கவுன்சிலர் ஒருத்தரே நல்லா வளர்ந்த மரத்த போற போக்குல அசால்ட்டா தட்டிட்டு போய்ட்டாருனு ஊர்மக்கள் தலைல அடிச்சுட்டு இருக்காங்க.

Exit mobile version