மத்திய அரசின் பயன்பாட்டில் இருக்கக்கூடிய 5 லட்சம் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மின்சார கார்களாக மாற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது வருகிறது. மின்சார வாகனங்களின் உற்பத்தியையும், மின்சாரக் கார்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், தற்போது மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய 5 லட்சம் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் விரைவில் மின்சார கார்களாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருடத்திற்கு 83 கோடியே 20 லட்சம் லிட்டர் எரிபொருள் மிச்சமாவதோடு, அந்த வாகனங்கள் மூலம் வெளிப்படும் 22 கோடியே, 3 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடும் தவிர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.