பெங்களூர் பலமனேர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றிய எரிந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வரும் விஷ்ணு என்பவர் தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தார். ஆந்திர மாநிலம் மாமடுகு பகுதியில் பெங்களூர் – பலமனேர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இந்தக் கோர விபத்தில் விஷ்ணுவின் மனைவி, மகன், மகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஷ்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக் குறித்துக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Discussion about this post