இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் இரட்டை சதத்தினால் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 6 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பெயினும் ஸ்மித்தும் நிலைத்து நின்று ஆடினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 24 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 24 ரன்கள் எடுத்துள்ளது. 5 டெஸ்ட் கொண்ட ஆஷஸ் தொடரில் 2 அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.