காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 47 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்ததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 47 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம், 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 45 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 350 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி நீரும் ,16 கண் உபரிநீர் போக்கி வழியாக 22 ஆயிரம் 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.