தமிழகத்துல கிட்டத்த 60ஆயிரம் பேருக்கு மேல மின் நுகர்வோர்கள் கடந்த 2 வருசமா பயன்படுத்துன மின்சாரத்துக்கான கட்டணத்த கட்டாமலேயே இருக்காங்காங்களாம். அதனால 47 கோடி ரூபா மின்சார வாரியத்துக்கு வரவேண்டியது இருக்குதாம்…அதிகபட்சமா கோவை வட்டத்துல 3ஆயிரத்து 823 மின் நுகர்வோர் 21கோடியே 13 லட்சமும், 2வதா காஞ்சிபுரம் வட்டத்துல 24ஆயிரம் மின் நுகர்வோர் 11கோடியே 86 லட்சம் ரூபாயும் கட்டாம இருக்காங்களாம்…
ஆனா மின்சாரக் கட்டணத்த கட்டாதவங்க மேலே எந்த நடவடிக்கையும் எடுக்காம நிர்வாகத்திறனற்ற திமுக கண்டுக்கிடாமயே இருக்குதாம். அதுமட்டுமில்லாம இதையெல்லாம் ஒழுங்கா வசூலிக்காம மின்சாரத் துறை நஷ்டத்துல ஒடுதுன்னு பொதுமக்கள் மேல மின்கட்டணத்த அதிகரிக்கிறதுல மட்டும்தான் ஆட்சியாளர்கள் குறியா இருக்காங்க…
பேனா சின்னத்துக்காக மக்கள் வரிப்பணத்துல இருந்து 81கோடிய செலவு பண்ணுறதுக்கு காட்டுற அக்கறைய 47 கோடி ரூபாய வசூல் பண்றதுக்கு எப்ப காட்டப்போறீங்க? டாஸ்மாக்குல பாட்டிலுக்கு 10 ரூபாய பிடுங்குற ஆர்வத்த, மின் கட்டண வசூல்லயும் காட்டியிருக்கலாம்னும் நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
Discussion about this post