2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றுவது இருக்கட்டும்..டிரான்ஸ்பார்மரில் 400 கோடி ஊழல் எந்த கணக்கில் வரும்?

தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை பொருத்துமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம்  தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இப்படி திடீரென்று இந்த காரியத்தில் மின்வாரியம் இறங்கியுள்ளது எனும் கேள்வி நம்முள் எழாமல் இல்லை.

தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மின்சாரம், மீட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் சரியான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடியவில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலமாகத்தான் மின்சார வாரியத்திற்கு பண இழப்பீடு ஏற்படுகிறதா என்ன? கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சாரத்துறையினர் டிரான்ஸ்பார்மர் வாங்குவதில் 400 கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளதாக சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. திடீரென இந்த மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவு இட்டிருப்பது இதனை மறைப்பதற்காகத்தானா? என்றும் நமக்கு சந்தேகம் வலுக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் டிஸ்ட்ரிபியூசன் ட்ரான்ஸ்பார்மர்கள் ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களுமே கூட்டுசதி செய்து அனைவரும் ஒரே விலையை சொல்லியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான 250 kva காப்பர் சுருளியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையான ரூ 7,51,660 குறிப்பிட்டு, அரசு அதை ரூபாய் 7.29 லட்சத்திற்கு குறைத்து வாங்கியுள்ளது. ஆனால் அதே மாதத்தில் காப்பர் சுருளியுடன் ராஜஸ்தான் கூடுதல் கெப்பாசிட்டியான 315 kva டிரான்ஸ்பார்மரை வெறும் 5.48 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளது.

அதேபோல  500 kva காப்பர் சுருளியுடன் தமிழக மின்வாரியம் நவம்பர் 2021 அனைத்து ஒப்பந்ததாரர்களும் 13.7 லட்சம் குறிப்பிட்டு 12.5 லட்சத்திற்கு டிரான்ஸ்பார்மர் வாங்கி உள்ளார்கள். ராஜஸ்தான் அரசாங்கம் 500 kva காப்பர் சுருளி டிராண்ஸ்பார்மருக்கு அதே ஸ்பெசிஃபிகேசனில் ஆகஸ்ட் 2021ல் டெண்டர் திறக்கப்பட்டு 7.87 லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு மின்சார வாரியம் அக்டோபர் 2021 இல் டெண்டர் போடும் பொழுது ரூபாய் 7.89 லட்சம் டெண்டர் தொகையாக நிர்ணயித்துள்ளார்கள். இதன் மூலமே மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஊழல் முறைகேடு தெளிவாக உள்ளது.

Exit mobile version