சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மழைக்கு முன்னரே 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துவிட்டன. அரசு நேரடியாக கொள்முதல் செய்ய தற்காலிக கொள்முதல் நிலையம் அமைத்ததால் ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொண்டு சென்றர். ஒரு சிலர் அரசு அதிகாரிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு கூடுதல் பணம் கொடுக்கும் விவசாயிகளிடம் முதலில் கொள்முதல் செய்து, பணம் கொடுக்காதவர்களுக்கு தாமதப்படுத்தியாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாளிலிருந்து அதிகாரிகள் கொள்முதல் செய்ய வராததால், மழையில் நனைந்து முளைத்து விட்டதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர். நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வசூல் செய்ய கூடாது எனவும், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post