திண்டுக்கல் முதல் நத்தம் வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில், அதிக அளவு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், இந்த சாலை பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இதைத் தவிர்க்க, மாநில நெடுஞ்சாலையாக இருந்த நத்தம் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. திண்டுக்கல்-நத்தம் இடையிலான 38 கிலோ மீட்டர் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையோரம் இருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. 10 முதல் 18 மீட்டர் வரை சாலைகள் அகலப்படுத்தப்படுவதால், விபத்துகள் தவிர்க்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post