ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்திய ராணுவம் நாக் எனப்படும் மூன்றாவது தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.
அதிகபட்ச வெப்பமான சூழலிலும் எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வண்ணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் நாக் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நாக் ரக ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் குறைந்தபட்ச வெப்பநிலையில் நாக் ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாக் ஏவுகணைகள் 500 மீட்டரிலிருந்து 4 கிலோ மீட்டர் வரை உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவை. நாக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்திய ராணுவம் மற்றும் டிஆர்டிஓ விற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post