திண்டுக்கல்லில் சோதனையில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் காலனி அருகே தனியார் பேருந்தில் இருந்து சரக்கு வாகனத்திற்கு குட்கா மாற்றப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது பேருந்தில் இருந்து வேறொரு வாகனத்திற்கு குட்கா மாற்றப்படுவது தெரிய வந்தது. கடத்தல்காரர்களை கையும், களவுமாக பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்து, கார் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூபாய் 1 கோடியே 50 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post