நேபாளத்தில் புயலுடன் கூடிய கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரா மாவட்டம் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில், ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post