ஜப்பானில், தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி, பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 34க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே உள்ள ரயில்வே கடவு பாதையில், பழங்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த ரயில் லாரி மீது மோதியது. இதில் லாரி உருக்குலைந்ததோடு, ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை வெளியேறியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் 34க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post