SBI ஏ.டி.எம். கொள்ளை: 30 வங்கிக்கணக்குகள் முடக்கமா? ஏன்?

சென்னையின் பல பகுதிகளில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜிம் உசேன் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நஜிம் உசேன், சென்னையில் இருந்து மொத்தமாக 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட ஏடிஎம் காடுகளின் 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பே மற்ற மாநிலங்களிலும் இதே பாணியிலான கொள்ளை இந்த கும்பலால் நடந்துள்ளது.

மற்ற மாநிலத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக அம்மாநில போலீசார் கேட்டுக்கொண்டால் சென்னை காவல்துறை விசாரணைக்கு உதவும் என்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

14 கொள்ளையர்கள் பல குழுக்களாக பிரிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்களை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை காவல் துறை ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்..

Exit mobile version