உறங்கி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை மாயம்

கன்னியாகுமரியில் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நாடோடி குடும்பத்தை சேர்ந்த சடையன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் உறங்கியுள்ளார். அதிகாலையில் கண் விழித்தப்போது குழந்தை மாயமாகியுள்ளாது. இதனையடுத்து குழுந்தையை அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் தந்தை காவல்துறையினரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை தேடி வருகின்றனர்.

Exit mobile version