உள்ளாட்சித் தேர்தலை நடத்த 3 மாத கால அவகாசம் கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தொகுதி மறுவரையறை மற்றும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிகள் நிறைவடையாததால் கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் 3 மாத கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version