பெரும் வரவேற்பை பெற்றுள்ள இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல்வேறு தொழில் முனைவோர்களை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழக அரசின் இந்த மாநாடு எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக இருந்ததாகவும், பொருளாதாரத்தில் மக்கள் உயர்வதற்கு இது சிறந்த வாய்ப்பு என்று ஜிஜி குழுமத்தின் இயக்குனர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறை நிபுணர்களும் சந்திப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று VGN Groups நிர்வாக இயக்குநர் பிரதிஷ் கூறியுள்ளார். முதலீடு செய்வது தொடர்பாக பல முதலீட்டாளர்களுடன் விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகவும், தொழில் முனைவோருக்கு இது பேருதவியாக இருந்தது எனவும் TVS Logistics நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post