கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களுக்கு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசால் வழங்கப்படும் விலையில்லா டேட்டா கார்டுகளை பயன்படுத்தி, மாணவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post