2G வழக்கு! கனிமொழி மற்றும் ஆ.ராசாவை விடாது துரத்தும் அமலாக்கத்துறை!

2 ஜி வழக்கில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத் துறையினரால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலைக்கு எதிரான சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 31 -ல் நடைபெறவுள்ளது.

Exit mobile version