நதி நீர் பிரச்னை, நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு, காவிரி விவகாரம் தொடர்பாக நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால், காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்படுவதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் அரசாணையை வெளியிட்டுள்ளது.
28 ஆண்டுகளாக இயங்கி வந்த காவிரி நடுவர்மன்றம் கலைப்பு… மத்திய அரசு அறிவிப்பு
-
By Web Team
- Categories: இந்தியா
- Tags: SupremeCourt
Related Content
நில அபகரிப்பு... விடியா திமுகவிற்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
By
Web team
May 4, 2023
வாய்மையே வெல்லும் - கவுதம் அதானி ட்வீட்!
By
Web team
March 3, 2023
கடலில் பேனா சிலைவைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூவர் வழக்கு!
By
Web team
February 8, 2023
4 நாட்களில் முடித்துவைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 1,800 வழக்குகள்! தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவிப்பு!
By
Web team
September 3, 2022
உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு
By
Web Team
August 31, 2021