திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 22 லட்சத்து 8921 வாக்காளர்கள் உள்ளதாகவும் மேலும் புதிய வாக்காளர்களாக 26 ஆயிரத்து 457 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் துணை மையங்கள் அமைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறினார்.
Discussion about this post