சென்னையில் 263 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் 263 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த 200 வார்டுகளுக்கும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் கடந்த 2 மாதங்களில் 263 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக்கை விற்பனை செய்தவர்களிடமிருந்து 44 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version