பேஸ்புக் பயனாளர்கள் 26 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் விவரங்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வியட்நாமில் செயல்படும் ஹேக்கர்கள் குழு ஒன்று தகவல்களை திருடியதாக பிரிட்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்திருக்கிறார். 26 கோடி பேரின் பெயர்கள், அலைபேசி எண்கள் மற்றும் பேஸ்புக் ஐடி ஹேக்கர்கள் தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் வணிக விளம்பரங்கள், அரசியல் பிரச்சாரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் திருட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ள பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. உலகில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் தொடர்ந்து எதிரொலிக்கும் தகவல் திருட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post