தமிழ்நாடு அரசு அனுப்பாததால் தேசிய அளவில் வாய்ப்பை இழந்த 247 மாணவர்கள்!

பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்கவில்லை என்கிற செய்திதான் தற்போது தமிழக அரசிற்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் லக்னோவில் நடைபெறுவதையொட்டி மே 11 ஆம் தேதியே தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடமிருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது. ஆனால் எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று சி.பி.ஐ என்று அழைக்கப்படும் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை ஆய்வாளர் கூறியிருந்தார். ஆனால் மே 11 ஆம் தேதியே கடிதம் அனுப்பப்பட்டும், போட்டியாளர்களின் முழுவிவரம் மே 29 ஆம் தேதிக்குள் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் வலைப்பக்கதில் பதிவெற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்திருக்கிறது.

உண்மையில் கடிதம் வந்தது பற்றியும், அது சம்பந்தப்பட்ட செய்தியினைப் பற்றியும் விழிப்புணர்வு இல்லாமல், ஏனோதானோ என்று அரசு அதிகாரிகள் செயல்பட்டுள்ளார்கள். முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்தான எந்த நடவடிக்கையினையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. தேசிய விளையாட்டு போட்டிகளில்  32 பிரிவுகளின் கீழ் 19 வயத்திற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில்தான் தற்போது தமிழ்நாடு பங்கேற்கவில்லை. இந்தப் போட்டிக்காக தமிழத்தைச் சேர்ந்த 247 மாணவர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டு பயிற்சியில் ஈடுபட்டும் வெற்றிக் கனவோடும் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் கனவுக்கோட்டையானது கானல் நீராக மாறிவிட்டது.

மத்திய அமைப்புக்கும், மாநில அமைப்புக்கும் சில தகவல் பரிமாற்றக் கோளாறுகள் உள்ளன என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் திட்டம் என்பதாலேயே 247 மாணவர்களின் லட்சியக் கனவிற்கு முட்டுக்கட்டை இடுகிறதா மாநில அரசு என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version