”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு.. சூழும் புகைமண்டலமும்” என்ற வசனத்தை ஒவ்வொருமுறையும் திரைப்படம் தொடங்கும் முன் திரையரங்குகளில் திரையிடுவார்கள். அது புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான விளம்பரப் படமாகும். அப்படி நம் தேசம் முழுமைக்கும் போதைப் பொருட்களானது மலிண்டு காணப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களானது கைப்பற்றப்பட்டு 1.44 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் நேற்றைக்கு தலைநகர் டெல்லியில் அழிக்கப்பட்டது.
புது டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களானது போதைப் பொருள் பணியகம் மற்றும் மாநில அரசுகளின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மூலம், கிட்டத்தட்ட 1.44 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, அசாம், சண்டிகர், கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைப்பற்றப்பட்ட 1,44 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன். இவற்றின் மதிப்பு சுமார் இரண்டாயிரத்து நானூற்று பதினாறு கோடி ரூபாயாகும். நடப்பு ஆண்டில் மட்டும், 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 12000 கோடி ரூபாயாகும். ”போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.