ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,378 கட்டிடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக தகுதி வாய்ந்த 662 கட்டிடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் சோலார் பேனல்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக தகுதி வாய்ந்த 1,378 கட்டிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன 2,000 கட்டிடங்கள் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அமைக்கப்படும் சோலார் பேனல்கள் மூலம் 5,639 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 662 கட்டிடங்களில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும் இதன் மூலம் 3064 மின்சாரம் கிடைக்கும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.